சுருளி அருவி (Suruli Falls) தமிழ்நாடு, தேனி மாவட்டத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது. கோடைக்காலத்தில் ஓர் இனிய சுற்றுலாத்தலமாகும்.
தரையில் மெலிதாகப் பரவி மறுபடியும் 40 அடி ஆழமாக வீழ்ந்து ஓடுகின்றது. அடர்ந்த காடுகளும் மரங்களும் இதன் அழகை மெருகூட்டுவதாகவும் உள்ளது.
ஆண்டு முழுவதும் இந்த அருவியில் நீர் வரும் எனச் சொன்னாலும் ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் நீர்ப் போக்குவரத்து அதிகமாய் இருப்பதால் அப்போது நிறைய மக்களைக் காணலாம்.
சுருளியாண்டவர் கோயில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் என்ற இதிகாசத்தில் இந்த அருவி பற்றி எழுதியிருப்பது இதன் பெருமைகளில் ஒன்று.
கீழ்ச் சுருளி, மேல்ச்சுருளி என இரு இடங்கள் உள்ளன. காலாற மலையின் மேல் நடந்து மேல்ச் சுருளிக்குச் சென்றால், அங்கே சித்தர்கள் வாழுகின்ற இடங்களைக் காணலாம். ஒரு குகையும் இருக்கிறது. படுத்துக் கொண்டு சிலர் உள்ளே சென்று வெளியே வருவதுமுண்டு.
இதன் அருகிலேயே மூணார் மற்றும் தேக்கடி ஆகிய சுற்றுலாத் தலங்கள் இருப்பது இதன் மற்றுமொரு சிறப்பாகும்.
No comments:
Post a Comment